பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.
சில பகுதிகளில் இடையிடையே மழைபெய்தாலும், குடைபிடித்து வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காத்திருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 577,717 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்