பெற்றோரை இழந்த சிறுவனுக்கு சக்கர நாற்காலி ! இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை

பலாங்கொடை, உடகந்த பிரதேசத்தில் தனது கால்கள் இரண்டும் செயல் இழந்த நிலையில் வாழும் 14வயதான சிறுவனுக்கு சக்கர நாற்காலியொன்றை பெற்றுக் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கையெடுத்துள்ளார்.

குறித்த சிறுவனின் பெற்றோர் அவரை விட்டுச் சென்றதை அடுத்து அவர் தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வரும் அதேவேளை, அவர்களுக்கும் நிலையான வருமானம் இன்மையால் மிகவும் வறுமையில் வாழும் குடும்பத்தில் குறித்த சிறுவன் வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து அறிந்த ரூபன் பெருமாள் தனது நண்பர்களுக்கு இவ் விடயம் தொடர்பாக தெரிவித்து குறித்த குடும்பத்திற்கு உலர் உணவுப் பொருட்களையும் பெற்றுக் கொடுத்ததாக மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles