குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் ஒரு சாதனையை எட்டியுள்ளதாக அந்தப் பாடசாலையின் அதிபர் Joseph Damiyan தெரிவித்துள்ளார்.
பாடசாலையில் இடவசதி, ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்ட போதும் வரலாற்றில் முதல் தடவையாக சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 80% மாணவர்கள் உயர் தரம் படிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்காக உழைத்த ஆசிரியர்கள், அதற்கு உறுதுணையாக நின்ற பெற்றோர், மாணவருக்கான இலவச கருத்தரங்குகள் ஒழுங்கு செய்த பழைய மாணவர் சங்கம், பாடசாலை நற்பெயருக்கு உழைத்த மாணவர் அனைவருக்கும் மற்றும் ஆசிரியர்களான சார்லஸ், ரகு, தினேஸ், சந்ரகுமார், சிவராஜா, கொட்வின் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பெறுபேற்றுக்காக உதவி செய்த அனைவருக்கும் அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.