இந்திய வெளிவிவகாரச் செயலாளர், ஒக்டோபர் முதல்வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பு வரும் அவர், 5 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இ.தொ.கா. பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இரு நாடுகளுக்கிடையில் முக்கியத்துவமிக்க சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
