நாட்டின் பல பகுதிகளில் நேற்று (05) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.
மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு எவ்வித மோசடி செயற்பாடுகளும் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று முற்பகல் 11.45 அளவில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

எனினும், நண்பகல் 12.15 அளவில் மின்சார விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.










