பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறியொன்று இன்று (06) காலை விபத்துக்குள்ளானது. இதனால் லொறி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கமுற்பட்டபோதே லொறி விபத்துக்குள்ளாகி, பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன்










