இ.போ.ச. பஸ்ஸொன்றும், ஆட்டோவொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் ஹல்துமுள்ளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹல்துமுள்ளைப் பகுதியில் களுபான என்ற இடத்தில் இன்று, இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பலாங்கொடையிலிருந்து பண்டாரவளையை நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ்சும், எதிர்த்திசையில் சென்ற ஆட்டோவுமே மோதி விபத்திற்குள்ளாகின. இவ்
விபத்தில் ஆட்டோவில் பயணித்த இருவரும், சாரதியுமாக மூவர் படுகாயமுற்றனர்.
பஸ்சில் பயணித்த பிரயாணிகளில் 11 பேரும் காயங்களுக்குள்ளாகினர்.
ஆட்டோவில் பயணித்த மூவரின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹல்துமுள்ளை பொலிசார், இவ் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். விபத்திற்குள்ளான பஸ் சாரதி விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளார்.
எம். செல்வராஜா, பதுளை










