கோதுமைமா, சீமெந்து விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்று

சீமெந்து மற்றும் கோதுமை மா என்பவற்றின் புதிய விலைகள் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் கோரியிருந்தனர்.

எனினும், 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்திருந்தார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், 20 ரூபா விலை அதிகரிப்பை சம்பந்தப்பட்ட தரப்பு கோரியுள்ளது.

Related Articles

Latest Articles