தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் வலிமையை காண எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் Exclusive புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது. அதில் ஒரு புகைப்படத்தில் தல அஜித் மற்றும் வலிமை பட வில்லன் கார்த்திகேயா பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளனர்.
அந்த புகைப்படத்தை நடிகர் கார்த்திகேயா பதிவிட்டு “என்னை பற்றி பெருமையாக நினைத்துக்கொள்ளும் ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று, நானும் தல அஜித் சாரும்” என பதிவிட்டுள்ளார்.