‘ கைவிடப்பட்ட கலாச்சார மண்டபத்தை கற்றலுக்காக வழங்கவும்’

நுவரெலியா நானுஓயா கிரிமிட்ய 476A கிராம சேவகர் பிரிவில்  கிரிமிட்ய நகரை அண்மித்த பகுதியில், மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பன்முகடுத்தப்பட்ட நிதியில்10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார மண்டபம்  இது வரையில் முழுமையாக கட்டப்படாமல் இருக்கின்றது.

இக் கட்டிடத்தை புனரமைப்பு செய்து நுவரெலியா நானுஓயா டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வழங்குமாறு பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பாஸ்கரன் மத்திய மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம்  கேட்டுக்கொள்கிறார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

” டெஸ்போர்ட் தமிழ் மகா வித்தியாலயத் தில் கற்றலுக்கு ஏற்ற கட்டிட வசதி இல்லாமலும் மமற்றும் அடிப்படை வசதி இல்லாமலும் காணப்படுகின்ற போதிலும் 2019 ஆம் ஆண்டு கா பொ த  சாதாரண தரத்தில் சுமார் 64 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதில் அதிகமான மாணவர்கள் உயர்தரத்தில வர்த்தகப் பிரிவில்  கல்வியை தொடர விரும்புகின்றனர். எனவே இதற்கு போதுமான கட்டிட வசதியும் போதியளவு தளபாட வசதி போதிய ஆசிரியர்கள் வசதி இல்லாது காணப்படுகின்றது.

இவ்வேளையில் இப்பாடசாலைக்கு புதிய கட்டிட வசதி கிடைப்பது கடினம். ஆகையால் பிரதேசத்தில் கைவிடப்பட்ட கலாச்சார
மண்டபத்தை புனரமைப்பு செய்து நமது மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டிற்கு வசதிகளை செய்து கொடுக்குமாறு பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் இச்சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் மத்திய மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிருபர் – டி.சந்ருa

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles