பொருளாதாரத்தில் அதிசயங்களைச் செய்யக்கூடிய ஏழு மூளைகளைக் கொண்ட ஒருவர் இருக்கின்றார் என பெருமை பேசும் அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மக்களை ஒடுக்குகிறது என்று எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருட்கள் விலையேற்றத்துக்கு எதிராக கெஸ்பேவ நகரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நாட்டில் எப்பகுதிக்கு சென்றாலும் ‘இல்லை’ என்ற சொல்லை கேட்கக்கூடியதாக உள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை எடுத்துரைப்பதற்கு இந்த ஒரு சொல் போதும் எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.











