குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

மொனராகலை, தம்பகல்ல, உடுமுல்ல பகுதியில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (15) மாலை குறித்த இருவரும் குளத்தில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இருவரும் 14 வயதுடையவர்கள் என்றும் கொல்லாதெனிய தம்பகல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles