ஜோசப் ஸ்டாலினுக்கும் புலி முத்திரை குத்தினார் டிலான் பெரேரா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் – என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

 

 

 

” எமது இராணுவத்தினர் மக்களை கொன்றனர் எனக்குறிப்பிட்டு, யாழ்ப்பாணத்துக்குச்சென்று புலிகளுடன் இணைந்து போராடியவர்தான் ஜோசப் ஸ்டாலின். அவர் புலிகளின் கட்சியை சேர்ந்தவர்.

அடுத்ததாக மஹிந்த ஜயசிங்க என்பவர் ஜே.வி.பியின் முழு நேர அரசியல் செயற்பாட்டாளர். இவர்கள்தான் கல்வி கட்டமைப்பை குழப்புகின்றனர்.” – என்றும் டிலான் பெரேரா குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, பாடசாலைகளின் சாவிகளை ஒப்படைக்குமாறு அதிபர்களுக்கு, பொலிஸார் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர். இதனை ஏற்கமுடியாது. வலயக்கல்வி பணிப்பாளர் தீர்மானமொன்ற எடுக்கும்வரை அதனை ஒப்படைக்கமாட்டோம் – என்று அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles