நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 60ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் 13 பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 265 வாகனங்களில் பயணித்த 469 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.










