ஸ்கொட்லாந்து அணியை பந்தாடியது ஆப்கான் அணி!

ரி – 20 உலகக்கிண்ண தொடரில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ் அணி, 130 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ரி – 20 உலகக்கிண்ண தொடரில் சூப்பர்-12 சுற்றில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.

பின்னர், 191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஸ்காட்லாந்து விக்கெட்டுகள் வீழ்ந்தது.

இதனால் ஸ்கொட்லாந்து 10.2 ஓவரில் 60 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

Related Articles

Latest Articles