அடர்த்தியான புருவம் வளர இயற்கை வழிகள்

இளம் பெண்கள் முதல் நடுத்தர வயது வரை, எந்த ஒரு வயது வித்தியாசமும் இல்லாமல் பெண்கள் அனைவரும் தங்களது புருவத்தை அடர்த்தியாக வளர்க்க ஆசைக்கொள்வது இயல்பாகிவிட்டது. பொதுவாகவே நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு தான் நமது கூந்தலின் ஆரோக்கியம் அமைந்திருக்கும்.

 

 

 

ஆக நம்முடைய அன்றாட உணவில் சுத்தமான பச்சை காய்கறிகள், பழங்கள், பால், தயிர் மற்றும் மோர் ஆகியவைகளை சேர்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். இப்பொழுது இயற்கை நமக்கு அளித்திருக்கும் கற்றாழை, வெங்காயம் மற்றும் வெந்தையம் ஆகியவைகளைக் கொண்டு எப்படி புருவத்தை அடர்த்தியாக வளர்ப்பது என்று பார்க்கலாம்.

 

 

முதலில் சுத்தமான கற்றாழை எடுத்து அதன் மேல் தோலை அகற்றிவிட வேண்டும். உள்ளே இருக்கும் திரவத்தை (அரைத்திண்மக் கரைசலை) எடுத்து தினமும் இரவு நீங்கள் உறங்குவதற்கு முன் உங்கள் புருவத்திலும் முகத்திலும் பூசிக்கொள்ள வேண்டும். இதே போல் தினமும் செய்துவந்தால், உங்களது புருவம் அடர்த்தியாவதுடன் முகத்தில் இருக்கும் காயங்களும் குணமாகிவிடும். இந்த கற்றாழை திரவத்தை (Gel) பிரித்தெடுக்க நேரம் இல்லாதவர்கள் கவலைப்படவேண்டாம், கற்றாழை கூழ் (Aloe vera Gel) கடைகளிலேயே கிடைக்கின்றன. அதை நீங்கள் வாங்கி உபயோகிக்கலாம், ஆனால் அது எந்த அளவிற்கு தரமானது என்பதனையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.அடுத்தபடியாக வெங்காயம், இதில் இருக்கும் “கந்தகம்”  கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வேகமாகவும் வளரச்செய்கிறது. வெங்காய சாரில் பருத்தி மொட்டுகளை (Cotton Buds) நனைத்து உங்களது புருவத்தில் தடவிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால் இரவு முழுவதும் வெங்காய சாரினை சுத்தம் செய்துவிடக்கூடாது என்பதுதான். அப்படி செய்துவந்தால் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

வெந்தையத்தை தண்ணீரில் ஊறவைத்து பிறகு நன்கு அரைத்து இரவு தூங்குவதற்கு முன்  உங்களது புருவத்தில் பூசிக்கொள்ள வேண்டும், அடுத்தநாள் காலையில் சுத்தம் செய்யவது நல்லது. வேண்டும் என்றால் இதனுடன் பாதாம் எண்ணையை சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு நல்ல பலன் விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles