நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களை 50 வீத மாணவர்களுடன், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
