லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை நடுக்கணக்கு லயன் குடியிருப்பில் நேற்று (11) இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தால் 24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
இதனால் நிர்க்கதியாகியுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் அயலவர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்தீயினை பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள்,தங்க நகைகள் ஆடைகள, தளபாடங்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீவிபத்து ஏற்படும் போது தீயணைக்கும் பிரினரோ அல்லது கருவிகளோ உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக தீ கட்டுப்படுத்த முடியாது போவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
இந்த தீவிபத்தில் எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை.
குறித்த தீப்பரவல் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்