அண்ணாத்த திரைவிமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில், மிகவும் பிரமாண்டமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. கமெர்ஷியலாக தொடர்ந்து பல ஹிட் கொடுத்த இயக்குனர் சிவாவுடன், ரஜினி கைகோர்த்துள்ள முதல் படம் இது. இந்த ஒரு விஷயமே ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அந்த எதிர்பார்ப்பை அண்ணாத்த பூர்த்தி செய்தாரா..? இல்லையா..? வாங்க பார்க்கலாம்..

கதைக்களம்

நியாயத்திற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கும் காளையன் கதாபாத்திரத்தில் அடாவடியுடன், மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினிகாந்த். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் படைப்பை முடித்து ஊருக்கு வரும்போது திருவிழா போல் கொண்டாடுகிறார். அண்ணன் மீது தங்கையும், தங்கையின் மீது அண்ணனும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார்கள்.

தனது உயிருக்கும் மேலாக நினைக்கும் தனது தங்கைக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை தேடுகிறார். பல இடங்களில் தேடி, ஒரு வழியாக மாப்பிள்ளையை கண்டுபிடித்து திருமணம் செய்து வைக்கும் நேரத்தில், கீர்த்தி சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி, தான் காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டு கொல்கத்தாவிற்கு சென்று விடுகிறார்.

இதனால் ரஜினி மனமுடைந்து போகிறார். இதன்பின் சிறிது காலம் கழித்து கீர்த்தி சுரேஷ் பக்கம் இருக்கும் உண்மையை தெரிந்துகொள்ளும் ரஜினி, தனது தங்கையை பார்க்க கொல்கத்தாவிற்கு உடனடியாக செல்லகிறார். ஆனால், அங்கு ரஜினிக்கு பேரதிர்ச்சியும், பல பிரச்சனைகளும் காத்துகொண்டு இருக்கிறது. இதிலிருந்து ரஜினி எப்படி தன்னையும், தன் தங்கையையும் காப்பாற்றினார் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

காளையன் கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது ஸ்டைலில், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் காட்சிகளில் பட்டை கிளப்பியிருக்கிறார். தங்கையாக வரும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்ணனுடன் பாசம் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் கீர்த்தி ஸ்கோர் செய்கிறார்.

வழக்கறிஞராக வரும் நயன்தாரா, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டுள்ளார். குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். மெயின் வில்லனாக வரும் ஜெகபதி பாபுவின் நடிப்பு ஓகே.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ரஜினி ஏற்ற ஸ்டைலில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிவா. கதைக்களம் ஓகே வாக இருந்தாலும், திரைக்கதையில் வேகமில்லை.

1 Half ஓரளரவு நம்மை ரசிக்க வைத்தாலும், 2 Half மாஸ் வசனங்கள், மாஸ் காட்சிகளும், செண்டிமெண்ட் வசங்கள் மட்டுமே இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் மிகப்பெரிய பலவீனம், படத்தில் நிறைந்துள்ள பல தேவையற்ற காட்சிகள் தான்.

கமெர்ஷியல் படமென்றாலும், பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது. இமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. வெற்றி பழனிசாமியின் ஒளிப்பதிவு கலர்புல்.

க்ளாப்ஸ்

ரஜினியின் நடிப்பு

கீர்த்தி சுரேஷ் நடிப்பு

பல்ப்ஸ்

தேவையற்ற மாஸ் காட்சிகள்

திரைக்கதை

லாஜிக் மிஸ்ஸிங்

மொத்தத்தில் அண்ணாத்த ஏமாற்றம்.. 

Related Articles

Latest Articles