ச.தொ.ச விற்பனை நிலையங்களில் இன்று முதல் சீனி மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ச.தொ.ச விற்பனை நிலையத்தில் ஐந்து பொருட்கள் வாங்கும் பட்சடத்தில் மட்டுமே 3 கிலோ சீனி கொள்வனவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியடைந்திருந்ததுடன், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று முதல் ச.தொ.ச. விற்பனை நிலையங்களில் சீனி மட்டும் கொள்வனவு செய்ய முடியும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிததுள்ளார்.