இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி (NOCSL) இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளரான Crysbroஐ விளையாட்டு மேம்பாட்டுக்கான தனது மூலோபாய பங்குதாரராக அண்மையில் அறிவித்துள்ளது.
மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை அடைய இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளை மேம்படுத்துவதில் Crysbroஇன் முன்னோடி பங்கை அங்கீகரிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு கூட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“உண்மையில், இளம் விளையாட்டு வீரர்களுக்கு கணிசமான ஆதரவை வழங்குவதற்கும் விளையாட்டுத் துறையில் அவர்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து கிரிஸ்புரோ ஆரம்பித்துள்ள NOCSL Crysro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் அவர்களை விளையாட்டிற்கான எங்கள் மூலோபாய பங்குதாரர்களாக நியமிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
ஏனெனில், வரவிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அதிகாரமளித்தல் மற்றும் வெற்றிக்கான பொதுவான இலக்குக்கான அர்ப்பணிப்புக்காக கிரிஸ்ப்ரோ நிர்வாகத்திற்கு நான் பணிவுடன் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்துள்ளார்.
Crysbro Next Champ’ நிகழ்ச்சித் திட்டம் இதுவரையில் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களின் ஆதரவிற்கு வழிவகுத்துள்ளது மற்றும் 150க்கும் மேற்பட்ட திறமையான இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளை சர்வதேச அரங்கிற்கு உயர்த்தியுள்ளது.
“எங்கள் NOCSL Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், விளையாட்டு வீரர்களுக்கு நிலையான மற்றும் சர்வதேச ஆதரவை வழங்குவதன் மூலம் வரவிருக்கும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அவர்கள் சிறந்து விளங்குவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணி வகிக்கும் வகையில், மூலோபாய பங்குதாரர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பளித்த தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.” என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரேஸ் செல்லார் கூறினார்.
NOCSL Crysbro Next Champ புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிபெற்ற இளம் வீர வீராங்கனைகள் 20 பேருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக Crysbro, NOCSL உடன் இணைந்து ‘Next Champ’ புலமைப்பரிசில் திட்டத்தின் விரிவாக்கமான ‘Next Olympic Hope’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
‘Next Olympic Hope’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, நாட்டிலுள்ள மற்றும் வெளியில் உள்ள இலங்கையர்கள் www.nextolympichope.com ஊடாக இந்த இளம் மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக தகுந்த நன்கொடைகளை வழங்க முடியும்.
Crysbro Next Champ நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், முறையான பயிற்சி மற்றும் முறையான உணவுமுறை போன்ற துறைகளில் நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் பரந்த அளவிலான விளையாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்குகிறது.
நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய தூணாக, ஒரு குறிப்பிடத்தக்க சமூக பங்களிப்பை வழங்கியது மற்றும் விளையாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.