பட்ஜட்மீதான ஜே.வி.பியின் பார்வை…

2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கை ராஜபக்ச குடும்பம் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் மக்களுக்கு எதுவும் பகிரப்படவில்லை எனவும் ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் ஏழு மூளையின் பிரதிபலன் மக்களுக்கு கிடைத்துள்ளது. நாட்டின் வருமானம் 2 ஆயிரம் பில்லியன் ரூபாயாக இருக்கும் போது செலவுகள் 5 ஆயிரம் பில்லியன் ரூபாயாக இருக்கின்றது.

நாட்டில் மிகப் பெரியளவில் வரவு செலவு பற்றாக்குறை காணப்படுகிறது. குறிப்பாக இந்த வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு மெதுவான வியர்வையையும் மயக்கத்தையும் ஏற்படுத்தும் வரவு செலவுத்திட்டம்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகையால் பெரிய புரட்சிகள் எதுவும் நடந்துவிடவில்லை. இதனடிப்படையில் பழைய பழகிய மெட்டு மற்றும் வார்த்தைகள் அடங்கிய ஆவணமாக இம்முறை வரவு செலவுத்திட்டம் காணப்படுகிறது.

குறிப்பாக கல்வி, சுகாதார துறைகளுக்கு பெரியளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆசிரியர்கள் ஒரு வருடமாக வீதியில் இறங்கி போராடியதன் காரணமாகவே அவர்களுக்கு ஏதோ ஒன்று கிடைத்துள்ளது.

அத்துடன் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கூட நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles