சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
வலுசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இவ்வாறு மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்திய செலாவணியை உரிய வகையில் முகாமை செய்து, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி பிரச்சினை தீர்ந்ததும் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.