ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் பதுளை மாவட்ட நிகழ்வு இன்றைய (15-11-2021) தினம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


பதுளை மாவட்டத்தின், ஹாலிஎல பிரதேச சபைக்குட்பட்ட, தெமோதர நீர் வழங்கல் திட்டத்தின் சில்பொலகம மற்றும் அந்துடுவாவெல பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக சுமார் 1500 குடும்பங்கள் பயனடையவுள்ளனர். இதற்காக சுமார் 205 கோடிகள் மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக, டிலான் பெரேரா, ஹாலிஎல பிரதேச சபை தலைவர் நிமல் சேனாநாயக்க உட்படப் பிரதேச அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் கலந்துகொண்டனர்
-ராமு தனராஜா-










