எல்ல பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை நான்கு மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந் நிதி அறிக்கை, பிரதேச சபைத் தலைவரினால், (இன்று) 16-11-2021ல் சபை அமர்வின் போது, சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து வாத விவாதங்கள் இடம்பெற்று, நிதி அறிக்கை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
குறிப்பிட்ட நிதி அறிக்கைக்கு ஆதரவாக 7 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய நான்கு அதிகப்படியான வாக்குகளினால், நிதி அறிக்கை தோல்வி கண்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பான 7 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான இருவரும், மக்கள் விடுதலை முன்னனி சார்பான ஒருவரும், சுயேச்சைக் குழு சார்பாக ஒருவருமாக 11 பேரே நிதி அறிக்கைக்கு எதிராக வாக்களித்தவர்களாவர். சபையின் ஐக்கியதேசியக் கட்சி சார்பான ஏழு பேரும் ஆதரவாக வாக்களித்தனர். சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பான மூன்று பேர், நடுநிலைமை வகித்தனர்.
இதற்கமைய, நான்கு மேலதிக வாக்குகளினால், அடுத்தாண்டிற்கான வரவு – செலவுத்திட்ட நிதி அறிக்கை தோல்வி அடைந்தது.
எம். செல்வாஜா, பதுளை