” போராட்டத்தில் பங்கேற்கவரும் மக்களை ஒடுக்கும் செயலை உடனடியாக நிறுத்துங்கள்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்க்கட்சித் தலைவருக்கு எடுத்துக்கூறும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இந்நிலையில் மக்கள் கொழும்புவருவதை தடுப்பதற்கு பொலிஸார் தடை உத்தரவு பெற முற்பட்டுள்ளனர். பெரும்பாலான நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளன.
பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பினரை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மக்களை ஒடுக்கும் செயலை உடன் நிறுத்துங்கள். அத்தகைய செயல்கள் கீழ்த்தரமானவை. இலங்கை என்பது பொலிஸ் இராஜ்ஜியம் அல்ல. ” – என்றார்.