சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கடுகன்னாவை வீதி விவகாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையை ஒருவழிப் பாதையாக போக்குவரத்திற்காக திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறு இன்றேல் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாற்று வழி பாதையை விரைவில் அபிவிருத்தி செய்யுமாறும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.