” இந்த அரசு அழிவடைந்தாலும் நாம் சர்வதேச நாணய நிதியத்தை நாடமாட்டோம். சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது சிறைக்கு செல்வதைவிடவும் பயங்கரமானது. சிறைக்கு சென்றால் குறைந்தபட்சம் உணவாவது கிடைக்கும். சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் அவர்கள் எம்மை திண்று விடுவார்கள்.”
இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று, சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் வாசு இவ்வாறு குறிப்பிட்டார்.