சீன உரக்கப்பலில் ஆயுதங்களா?

” சீன உரக்கப்பலால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது. உரத்துக்குள் ஆயுதங்களோ அல்லது போதைப்பொருட்களோ இருப்பதாக தகவல்கள் கிடைக்கவில்லை.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, சீன உரத்தை இலங்கையிலுள்ள அரச நிறுவனமொன்று பரிசோதனமூலம் நிராகரித்துள்ளது. அரசும் ஏற்கமுயாது என கூறிவிட்டது. ஆனாலும் அந்த கப்பல் எமது நாட்டு கடல் எல்லைக்குள் சுற்றி திரிகின்றது. இது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இல்லையா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதலிளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” உரக்கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். கப்பலில் உள்ள உரத்தை ஏற்கமுடியாது என விவசாயத்திணைக்களம் அறிவித்துவிட்டது. எனவே, நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை கப்பல் திரும்பி செல்லாமல் இருக்கலாம்.

குறித்த கப்பலால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. உரத்துக்குள் ஆயுதம் இருப்பதாகவோ அல்லது போதைப்பொருள் இருப்பதாகவோ எவரும் இன்னும் அறிக்கையிடவில்லை. அத்துடன், உரத்தில் கசிவு ஏற்பட்டு கடல் வளம் மாசுபடும் எனவும் குறிப்பிடப்படவில்லை” – என்றார்.

அதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் டளஸ்,

” இது இராஜதந்திர பிரச்சினை கிடையாது என சீனத் தூதுவரே அறிவித்துள்ளார். கப்பலில் உள்ள உரத்தை ஏற்கமாட்டோம் என விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். அமைச்சரும் அதே நிலைப்பாட்டில் உள்ளார்.” – என்றார்.

Related Articles

Latest Articles