ஒரே நாளில் லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் திறப்பு

லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் இன்று (18) பொதுமக்களின் வசதி கருதி திறந்து வைக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் அதிகளவு விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருட இறுதிக்குள் லங்கா சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles