அரசுடன் ‘டீலா’? – அதிரடியாக பதில் வழங்கிய ரிஷாட்!

” அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது. வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானமொன்று எடுக்கப்படும்.” – என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் மஹிந்தவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவன். 9 வருடங்கள் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச அதிகாரங்களுடன் செயற்பட்டார். வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றன. அதன் பங்காளிகளாக நாமும் இருந்தோம்.

கடந்த இரு வருடங்களில் 20 ஊடாக அவரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தையே நான் சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.  ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தது தவறு.”- என்றார்.

 

Related Articles

Latest Articles