நீர் கட்டணம் அதிகரிப்பு?

அடுத்தாண்டு வரை நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் செலவினம், வருமானத்தை விட அதிகரித்துள்ளமையினால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அதன் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாவிட்டால், நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க நேற்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 40 ஆண்டுகளில், நாட்டின் 45 சதவீத மக்களுக்கு நீர் விநியோகிக்ப்பட்டுள்ளது.

அடுத்த 4 வருடங்களுக்குள் அதனை 80 சதவீதமாக அதிகரிப்பதே தமது இலக்கு என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles