அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1, 500 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.11.2021) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தமக்கான தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியே முற்பகல் 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த இ.தொ.காவின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், தோட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
தோட்டங்களை துப்பரவு செய்வதற்கும், தொழிலாளர்களுக்கான சலுகைகளை வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.
க.கிஷாந்தன்