மீண்டும் தமிழில் ரீ- என்ட்ரி கொடுக்கும் பாவனா

பிரபல நடிகை பாவனா தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயங்கொண்டான், தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பிறகு கன்னட படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

ஒருமுறை கேரளாவில் நடைபெற்ற கலாசார விழாவில் நடனமாடிய பாவனாக்கு மலையாளப்  படங்களில் நடிக்க வாய்ப்பைக் கொடுத்தது. தற்போது பாவனா நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற கன்னட படம் வெளியாக இருக்கிறது. இதில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் பாவனா. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles