ஐஸ்வர்யா ராய் அழகும் அறிவு நிறைந்த அழகிய நடிகை
இவர் உலக அழகியாக வெற்றி பெற்ற பின்னர் பொலிவூட் பின்னர் ஹொலிவூட்டில் நுழைந்து தற்பொழுது இறுதியாக தேசிய மற்றும் சர்வதேச உற்பத்திகளின் தவிர்க்க முடியாத ஓரு நபராக உள்ளார்.
இவரின் நீடித்த புகழுக்கு அழகிய சருமத் தோற்றம், மயக்கும் சாம்பல் நிற கண்கள், அழகிய பேச்சு நேர்த்தியான நகர்வுகளாக இருக்கிறது.
இவரின் அழகின் ரகசியம் என்ன ? என்பது தான் அனைவரின் மனதிலும் தோன்றும் கேள்வி .
ஐஸ்வர்யா ராய் இயற்கையாகவே நல்ல கூந்தல் மற்றும் நல்ல சருமத் தோற்றத்தை உடையவர்.இவர் தனது அழகுக்கு அழகு சேர்ப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுகிறாா்.
இவர் பொரித்த உணவுகள்,ஜங் ப்ரூட் ,பொதிசெய்யப்பட்ட உணவு,புகைத்தல் மது அருந்துதல் என்பற்றை முற்றிலும் தவிர்த்து , அதிகமான பழங்கள் ,மரக்கறிகள் .வீட்டில் சமைத்த உணவுகள் சாப்பிடுவதோடு தண்ணீர் நிறைய அருந்துகிறார் இதனால் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஐஸ்வரிய ராயின் தோல் பராமரிப்பு
பருப்பு வகைகள்,பால் ,மஞ்சள் போன்றவற்றை பயன்பத்தி சருமத்தை பாதுகாக்கிறார்.மாறாக சருமத்தை ஈரலிப்பாக வைத்து கொள்ள தயிரை பயன்படுத்துகிறார்.
வெள்ளரிக்காயை பேஸ் பேக்கை முகத்திற்கு உபயோகிக்கின்றார்.
அவர் சரும பிரச்சனைகளை சமாளிப்பதற்காக முகம் கழுவுவதற்கு பொருத்தமான மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகிறார்.
அவருடைய சருமத்தை பாராமரிக்க இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்துகிறார். அதாவது வீட்டில் எளிதா தயாரிக்க கூடிய பொருட்களை பயன்படுத்துகிறார்.
ஐஸ்வர்யா ராய் குறைவான ஒப்பனையை விரும்புபவர் அந்த வகையில் இளஞ்சிவப்பு நிறம் ,பழுப்பு நிறம் ,ப்ரவுண் போன்ற நிறங்கள் அவருடைய உதட்டிற்கு கன்னங்களுக்கும் பொருந்த கூடியது.
இவர் விரும்பி பாவிக்கும் அழகு சாதன பொருட்கள் மெக்(Mac), லக்மீ(Lakme), ரிவ்லோன்(Revlon), மெபலின்(Maybelline) சார்ந்த உற்பத்தி பொருட்கள்.
ஐஸ்வர்யா ராய் டயட் சீக்ரெட்ஸ்
ஐஸ்வர்யா ராயின் அழகிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பின்னணியில் ரகசியம் இருக்கிறது.
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்கிறார். வழக்கமாக சிவப்பு அரிசி மற்றும் நார்சத்து அடங்கி உணவுகளை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு கரைய உதவுகிறது.
கிளாமர் குயின் ஐஸ்வர்யா ராய் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள மிகவும் கஷ்டப்படுவதில்லை என்ற உண்மையை எப்போதும் ஒப்புகொள்வார்
தூம் 2 படத்தில் மட்டுமே மிகவும் பிட்டான உடல் அமைப்புடன் இருந்தார்.இவர் அப்போது யோக கூட செய்வது குறைவு.ஆனால் காலை நடைப் பயிற்சி செய்வதன் மூலம் ஒவ்வொரும் நாளையும் ஆரம்பிக்கின்றார்.அத்தோடு இலகுவான உடற்பயிற்சி மற்றும் சக்தி யோகா செய்கிறார்.