தோல் சுருக்கங்களை எளிய முறையில் நீங்க வேண்டுமா? இதோ சில அழகு குறிப்புகள்!

வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று.

ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது இதனை மறைக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு சில இயற்கை பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
  • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.  
  • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
  • தேங்காய் எண்ணெய்யை இடுப்பைச் சுற்றி தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் போதும். மெதுவாக கறுப்புத் தழும்பு மறைந்து விடும்.
  • முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும். இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.

Related Articles

Latest Articles