ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவிற்குள் மேற்கொண்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனையில் 17 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியர் சுதர்ஷன் தெரிவித்தார்.
தொற்று உறுதியான 17 பேரும், அவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்களின் நேரடிக் கண்காணிப்புக்களில் மேற்படி சுய தனிமைப்படுத்தல் இடம்பெறும்.
40 பேருக்கு மேற்கொண்ட ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகளிலேயே, 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.