நவீனும் அதிரடிக்கு தயாராகிறார்! ரணிலுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் அர்ஜுன ரணதுங்க எடுத்த முடிவையே தனக்கும் எடுக்க நேரிடும் என்ற தொனியிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவிகளில் இருந்தும், உறுப்புரிமையில் இருந்தும் ரணதுங்க விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசிபெற்ற அவர், விரைவில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் பற்றி விவரிக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles