சபைக்கு வந்தார் வர்ணகுமார – சென்றார் மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினராக மஞ்சு லலித் வர்ணகுமார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் இன்று சத்திய பிரமாணம் செய்துக்கொண்டார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் கூடியது. இதன்போது அவர் உறுதியுரை ஏற்றார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, தூதுவர் பதவிக்காக எம்.பி. பதவியை துறந்துள்ளார். அதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மஞ்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles