டில்லி பறந்தது ஏன்? 10 திகதி விளக்குவார் பஸில்!

” இந்திய பயணத்தின் நோக்கம் என்ன, பேசப்பட்ட விடயங்கள் எவை என்பன தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெளிவுப்படுத்துவார்.” என அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று தெரிவித்தார்.

நிதி அமைச்சரின் இந்திய விஜயம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்போது இடம்பெறும் நிதி அமைச்சரின் உரையில் இந்திய விஜயம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

Latest Articles