வடக்கில் சீனா கைவிட்ட தீவுகள் இந்தியா வசமாகுமா?

வடக்கிலுள்ள தீவுகளில் மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் மின்னுற்பத்தி செயற்றிட்டத்தை ஆரம்பிக்க சீன நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும் அவை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்படி தீவுகளில் சீனா முன்னெடுக்கவிருந்த திட்டங்கள் இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் கையளிப்பதற்கு அமைச்சரவையில் ஆராயப்பட்டதா என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது நேற்று கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளிக்கையிலேயே அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் அறிவித்தார்.

Related Articles

Latest Articles