வத்துகாமம் மீகம்மன சிறுவர்கள் காப்பகத்திலிருந்து தப்பிச்சென்ற ஐவரில் மூவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்றவர்களில் ஒருவர் தவுளகளை பொலிஸ் பிரிவில் உறவினர் வீடு ஒன்றில் இருந்தும், மற்றொருவர், நாவலப்பிட்டியவில் உள்ள வீடொன்றில் இருந்தும் சிறுமி ஒருவர் வத்துகாமத்தில் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்.
தவுளகளை கண்டு பிடிக்கப்பட்ட சிறுமியை வேறொரு சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கும்படி கண்டி மாவட்ட நீதவான் உத்தரவிட்டதுடன் மற்ற இருவரும் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளனர். இரங்களை மற்றும் உடபுசல்லாவ பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகளை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த 6ம் திகதி இந்த காப்பகத்திற்கு அண்மையில் உள்ள பாடசாலைக்குச் சென்ற சமயம் தப்பிச்சென்றதாக வத்துகாம் பொலிசில் முறைப்பாடு செய்யபட்டிருந்தது.










