ராதாவுக்காக 3 நிமிடங்களை தியாகம் செய்த ஆளுங்கட்சி!

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணனுக்கு ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலிருந்து மூன்று நிமிடங்களை வழங்குவதற்கு ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சம்மதம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி நாள் விவாதத்தில் உரையாற்றுவதற்கு இராதாகிருஷ்ணன் எம்.பிக்கு எதிரணி 4 நிமிடங்களை ஒதுக்கியிருந்தது.

இராதாகிருஷ்ணன் எம்.பி. உரையாற்றிக்கொண்டிருக்கையில், ‘இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் உள்ளன’ – என்று சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அங்கஜன் ராமநாதன் சுட்டிக்காட்டினார்.

” இப்போதுதான் உரையாற்றவே ஆரம்பித்தேன். அதற்குள் நேரம் முடிந்துவிட்டதா? இந்த நேரம் எனக்குபோதாது, மேலதிக நேரத்தை தாருங்கள். ஆளுங்கட்சியில் இருந்தாவது நேரத்தை பெற்று தாருங்கள்.” – என்று ராதா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மூன்று நிமிடங்களை ராதாவுக்கு வழங்குவதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இணக்கம் தெரிவித்தார்.

தனது உரையின் முடிவில் இதற்காக ஆளுங்கட்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles