நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
10 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதாகவும், பெரும்போகத்தின்போது தேவையான அறுவடை கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இரசாயன உரத்துக்கான தடையையடுத்து நாட்டில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வயல் நிலங்கள் அழியும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் 2022 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு நாட்டில் அரசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பல தரப்பினரும் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளிக்கையிலேயே விவசாயத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.