டொலர் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது மாற்று வழிகள் எவை என்பன தொடர்பில் இன்று முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதனால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரும் இன்று அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
டொலர் நெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்டவற்றுக்கே அரசு முக்கியத்துவம் வழங்கியுள்ளது. பால்மா இறக்குமதியைக்கூட கைவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
நிதி நெருக்கடிக்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே அரசு இருந்தது. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்கும் நிலையில் இலங்கை இல்லை. ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என ஆளுங்கட்சியிலுள்ள சிலர் யோசனை முன்வைத்துள்ளனர். எதிரணியும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐ.எம்.எப்பை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.