இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், இரு நாட்கள் பயணமாக வடக்குக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
டிசம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் அவரின் வடக்கு விஜயம் அமையும்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்டவர்களை சந்தித்து அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களையும் சீனத் தூதுவர் வழங்கி வைக்கவுள்ளார்.
வடக்கில் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவிருந்த மின் திட்டத்தை சீனா கைவிட்டுள்ள நிலையிலேயே அந்நாட்டு தூதுவர், வடக்குக்கான பயணத்தை மேற்கொள்கின்றார்.
