ரயில் போக்குவரத்தில் தாமதம்

இன்று (13) நள்ளிரவு முதல் மருதானை ரயில் தொலைத்தொடர்பு மையத்தின் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மற்றும் சேவையளர்கள் முகங்கொடுக்கும் இன்னல்களுக்குரிய தீர்வு இன்மை என்பவற்றை மையப்படுத்தி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாளைய தினம் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles