சீன நிறுவனத்துக்கு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை ஒப்புதல்

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நீதி அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரால் அமைச்சரவைப் இதற்கான பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமையயே குறித்த பத்திரங்கள் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பக்றீரியாக்கள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் நிராகரிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles