‘அமெரிக்கா பறக்க முன் ஆளுங்கட்சியினருடன் பஸில் மந்திராலோசனை’

ஆளுங்கட்சி எம்.பிக்களின் முக்கிய கூட்டமொன்று இன்று முற்பகல் நடைபெற்றது.

பஸில் ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா என்பன உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.

அதேவேளை, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்றிரவு அமெரிக்கா நோக்கி பயணிக்கின்றார். இந்நிலையில் ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றது.

Related Articles

Latest Articles