லிட்ரோ நிறுவனத்துக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

எரிவாயு சிலிண்டர் அடங்கிய கலவைகள் மற்றும் சிலிண்டர்களை விநியோகிப்பதற்குள்ள வாய்ப்பு தொடர்பில் அறிவிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நாளை (15) வரை காலக்கெடு வழங்கியுள்ளது.

லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீள பெற்றுகொள்ள உத்தரவிடுமாறு கோரி சிவில் அமைப்பு செயற்பாட்டாளரான நாகந்த கொடிதுவாக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு நீதிபதிகளான ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எரிவாயு சிலிண்டரில் உள்ளடக்க வேண்டிய வாயுவின் அளவு மற்றும் அந்த அந்த சிலிண்டர்களை விநியோகிப்பதற்குள்ள வாய்ப்பு மற்றும் தற்போது சந்தைகளிலுள்ள சிலிண்டர்களை மீள பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் தொடர்பிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசூரிய, இதுதொடர்பில் தமது தரப்பினரிடம் விசாரித்து தகவல்களை சமர்ப்பிப்பதற்கு நாளை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

அதற்கமைய இந்த மனு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles